கல்யாணத்துக்கு முன்பு மாதவனைப் பற்றி கீதா கேள்விப்பட்டதெல்லாம் அவன் மிகவும் எளிமையானவன், எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவன் என்பதுதான்.
மாதவன் அவளை விட வசதிக் குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும் அவள் பெற்றோர் மாதவனுக்கு அவளை மணமுடித்ததற்குக் காரணமும் அவனுக்கு இருந்த நல்ல பெயர்தான்.
ஆனால் திருமணத்துக்குப் பிறகு, மாதவன் தன்னைக் கல்யாணம் செய்து கொண்டது பணத்துக்காகத்தானோ என்ற எண்ணம் அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தன் பெற்றோருக்கு எப்படி அவன் நோக்கம் தெரியாமல் போனது என்றும் அவள் வியந்தாள்.
தன் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்த மாதவன், திருமணம் முடிந்து ஓரிரு மாதங்களிலேயே தனிக்குடித்தனம் அமைத்து விட்டான்.

கீதாவுக்கு இதில் விருப்பமில்லை. அவன் பெற்றோர்கள் தன்னைத்தான் இதற்குக் காரணமாக நினைப்பார்கள் என்று அவள் சொன்னதை அவன் பொருட்படுத்தவில்லை.
"எல்லாம் உன் சந்தோஷத்துக்குத்தான்" என்றான்.
"எனக்கு எல்லோரும் சேர்ந்து இருப்பதுதான் சந்தோஷம்" என்றாள் கீதா.
"உனக்கு எது நல்லது என்று எனக்குத்தான் தெரியும்" என்று சொல்லி விவாதத்தை முடித்து விட்டான் மாதவன்.
அவன் பெற்றோர்கள் முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மாதவன் தன் முடிவில் பிடிவாதமாக இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
தனிக்குடித்தனம் போனதும், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் படலம் துவங்கியது.
முதலில் தன் உறவினர்கள் வீடுகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அவன் சொன்னபோது அவள் மறுக்கவில்லை.
ஆனால், மாதவனின் உறவினர்கள் வீடுகளுக்குப் போகும்போது எந்த ஒரு பரிசுப் பொருளும் வாங்கிச் செல்லக் கூடாது என்று அவன் பிடிவாதமாக இருந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சிறு பிஸ்கட் பாக்கெட் வாங்கி செல்வதைக் கூட அவன் அனுமதிக்கவில்லை.
மாதவனின் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று முடித்ததும், கீதாவின் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் முறை துவங்கியது.

ஆனால், அவள் உறவினர்கள் வீடுகளுக்குப் போகும்போது மட்டும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள், தின்பண்டங்கள் என்று அவனுடைய வசதிக்கு மீறியே வாங்கிச் சென்றான்.
'தன் உறவினர்களை மதிக்கவில்லை. என் உறவினர்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் முனைப்பாக இருக்கிறார். என் உறவினர்கள் வசதி படைத்தவர்கள் என்பதால் அவர்களைக் கவர நினைக்கிறார். தன் உறவினர்கள் சாதாரண நிலையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களை அலட்சியம் செய்கிறார். என்ன ஒரு மனப்பான்மை இது!"
பொறுக்காமல் அவனிடமே இது பற்றிக் கேட்டு விட்டாள்.
"உன் உறவினர்கள் பணக்காரர்கள் என்பதால் அவர்கள் நம்மை, குறிப்பாக உன்னை, மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் அந்தஸ்துக்கு ஏற்ற வகையில் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்றேன்" என்றான் மாதவன்.
"உங்கள் உறவினர்களைப் பார்க்கப் போகும்போது, அவர்களுக்கு எதுவும் வாங்கிச் செல்லக் கூடாது என்று ஏன் பிடிவாதமாக இருந்தீர்கள்?"
"நீ வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவர்கள் நம் வீட்டுக்கு வரும்போது தங்கள் சக்திக்கு மீறிப் பணம் செலவழித்துப் பொருட்கள் வாங்கி வருவார்கள். நாம் அவர்கள் வீட்டுக்குப் போகும்போது வெறும் கையுடன் போனால், அவர்கள் நம் வீட்டுக்கு வரும்போது பொருட்கள் எதுவும் வாங்கி வராமல் இருப்பதில் அவர்களுக்கு எந்த சங்கடமும் இருக்காது அல்லவா? அதுதான் அப்படிச் செய்தேன்."
கீதா முதல் முறையாகத் தன் கணவனைப் புதிய மரியாதையுடன் பார்த்தாள். இவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவனைப் பணத்தாசை பிடித்தவன் என்று தவறாக நினைத்து விட்டோமே என்று நினைத்து சங்கடப்பட்டாள். ஆயினும் ஒரு நெருடல்.
"அது சரி. கல்யாணத்துக்குப் பிறகு, உங்கள் பெற்றோர்களைப் பிரிந்து நாம் தனியாக வாழ வேண்டும் என்று ஏன் பிடிவாதமாக இருந்தீர்கள்? உங்கள் பெற்றோர் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்?"
"உண்மைதான். ஆனால் நாம் என் பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால், சில சங்கடங்களும், மனவருத்தங்களும் ஏற்பட்டிருக்கும். உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நீ ஒரு பெரிய இடத்துப் பெண் என்ற உணர்வு என் பெற்றோரிடம் எப்போதும் இருந்து கொண்டே இருந்திருக்கும். நீ இயல்பாகச் செய்கிற செயல்கள் கூடத் தவறாகத் தோன்றியிருக்கும்.

"எப்படியும் சில மாதங்களுக்குப் பிறகு மனக்கசப்புடன் பிரிய நேரிட்டிருக்கும். அதை விட முதலிலேயே சுமுகமாகப் பிரிவது நல்லது என்று நினைத்தேன். என் பெற்றோருக்குப் பொருளாதார ரீதியில் எந்த சிரமமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்."
எப்போதும் மற்றவர்களின் மனம் வருந்தக் கூடாது என்ற சிந்தனையிலேயே செயல்பட்டு வரும் தன் கணவனிடமிருந்து தான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் கீதா.
(1991ஆம் ஆண்டு எழுதப்பட்டது)